< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் நீச்சல் போட்டி : இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் இறுதி சுற்றுக்கு தகுதி..!
|30 July 2022 7:37 AM IST
நீச்சல் போட்டியில், இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ்,இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா முடிவடைந்த நிலையில் முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின.
இதில் நேற்று நடைபெற்ற நீச்சல் போட்டியில், இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ்,இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.நேற்று நடந்த அரையிறுதி ஆண்கள் 100 மீட்டர் பேக்-ஸ்ட்ரோக் பிரிவு நீச்சல் போட்டியில், அவர் 54.55 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 7வது இடம்பிடித்தார். இதனால் அவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.இறுதிப்போட்டி நாளை நடக்கிறது.