< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் ஆடவர் குத்துச்சண்டை: காலிறுதியில் ரோஹித் டோகாஸ் வெற்றி... பதக்கத்தை உறுதிசெய்தார்
|5 Aug 2022 1:52 AM IST
இந்த வெற்றியில் மூலம், இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை அவர் உறுதிசெய்துள்ளார்.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது. 7-வது நாளான நேற்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், குத்துச்சண்டை 67 கிலோ எடை பிரிவில் காலிறுதி போட்டிக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹித் டோகாஸ், நியு நாட்டின் சேவியர் மாதாஃபா-இகினோஃபோவை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரோஹித் டோகாஸ், சேவியர் மாதாஃபா-இகினோஃபோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியில் மூலம், இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தையும் அவர் உறுதிசெய்துள்ளார்.