< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் ஜூடோ போட்டி : இந்தியாவின் துலிகா மான் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
|3 Aug 2022 5:37 PM IST
அரையிறுதி போட்டியில் துலிகா மான் சிட்னி ஆண்ட்ரூஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ,இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் ஜூடோவில் 78+ கிலோ எடைப்பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் துலிகா மான் ,மொரீஷியஸின் ட்ரேசி டர்ஹோன் ஆகியோர் மோதினார். இப்போட்டியில் துலிகா மான் ,மொரீஷியஸின் ட்ரேசி டர்ஹோனை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவின் துலிகா மான் நியூசிலாந்தின் சிட்னி ஆண்ட்ரூஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.இறுதிபோட்டி இன்று இரவு நடைபெற உள்ளது,