< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி : முதல் சுற்றில் இந்திய இணை ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி வெற்றி

Image Tweeted By @Media_SAI 

காமன்வெல்த்-2022

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி : முதல் சுற்றில் இந்திய இணை ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி வெற்றி

தினத்தந்தி
|
5 Aug 2022 12:26 AM IST

இந்திய இணை 11-6, 11-5 மற்றும் 11-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின. டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32 சுற்றில் இன்று நடந்த போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா , ரீத் டென்னிசன், மனிகா பத்ரா ஆகியோர் தங்களின் போட்டியில் வெற்றி பெற்றனர்.

அதே போல் இந்தியாவின் ஆடவர் இரட்டையர் இணை சனில் ஷெட்டி மற்றும் ஹர்மீத் தேசாய் முதல் சுற்றில் சைர்ப்ரஸின் ஐயோசிஃப் எலியா மற்றும் கிறிஸ்டோஸ் சவ்வா உடன் மோதினர். இந்த போட்டியில் இந்திய இணை 11-6, 11-5 மற்றும் 11-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

மேலும் செய்திகள்