< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி: டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு
|29 July 2022 3:50 PM IST
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது.
இதில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலியா அணியுடன் மோதி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய மகளிர் அணி முதலில் விளையாடி வருகிறது.