< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸ் போட்டி : இந்தியாவின் பவினா பட்டேல் அரையிறுதிக்கு தகுதி
|4 Aug 2022 4:38 PM IST
பவினா பட்டேல் நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்த நிலையில் 7-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் தனது 3-வது குரூப் 1 ஒற்றையர் ஆட்டத்தில் இன்று களம் கண்டார். பிஜியை சேர்ந்த அகானிசி லாடுவுடன் மோதிய பவினா பட்டேல் 11-1, 11-5, 11-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.