< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் பேட்மிண்டன் : இளம் இந்திய வீரர் லக்சயா சென் தங்கம் வென்று சாதனை

Image Courtesy : @Media_SAI

காமன்வெல்த்-2022

காமன்வெல்த் பேட்மிண்டன் : இளம் இந்திய வீரர் லக்சயா சென் தங்கம் வென்று சாதனை

தினத்தந்தி
|
8 Aug 2022 4:58 PM IST

20 வயதே ஆன லக்சயா சென் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தை தட்டி சென்று சாதனை படைத்துள்ளார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று நடந்த பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் லக்சயா சென் மலேசியாவின் திசி யோங் உடன் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பான இந்த போட்டியில் லக்சயா சென் 19-21, 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை தட்டி சென்றார்.

20 வயதே ஆன லக்சயா சென் காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்