காமன்வெல்த் போட்டி 2022 : இந்திய அணியின் முதல் நாள் போட்டி அட்டவணை, நேரம் - முழு விவரம்
|இன்று தொடக்க விழா முடிந்த பிறகு நாளை முதல் போட்டிகள் தொடங்குகின்றன.
பர்மிங்காம்,
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நாளை முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உள்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறுகிறது.
இந்த போட்டியில் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.
இந்தநிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழா இன்று இரவு நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்திய தேசிய கொடியை பி.வி.சிந்து ஏந்தி செல்லவுள்ளார். இன்று தொடக்க விழா முடிந்த பிறகு நாளை முதல் விளையாட்டு போட்டிகள் தொடங்குகின்றன.
இந்த தொடரில் இந்தியாவின் முதல் நாள் அட்டவணை (ஜூலை 29) பின்வருமாறு :-
★ லாவ்ன் பவுல்ஸ் போட்டி : இந்திய நேரப்படி மாலை 5.30 மணி தொடங்குகிறது
கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் : சுனில் பகதூர், மிருதுல் போர்கோஹைன், தினேஷ் குமார், நவ்நீத் சிங், சந்தன் சிங், ரூபா டிர்கி, டானியா சவுத்ரி, லவ்லி சௌபே, பிங்கி
★ டேபிள் டென்னிஸ் - இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது
ஆண்கள் அணி தகுதிப் சுற்று – ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி, ஷரத் அச்சந்தா, சத்தியன் ஞானசேகரன்
மகளிர் அணி தகுதிச் சுற்று - தியா சித்தலே, மனிகா பத்ரா, ரீத் டென்னிசன், ஸ்ரீஜா அகுலா
★ பெண்கள் ஹாக்கி - இந்தியா vs கானா - மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது
★ நீச்சல் போட்டி - இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது
400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் - குஷாக்ரா ராவத்
100மீ பேக்ஸ்ட்ரோக் - ஸ்ரீஹரி நடராஜ்
100மீ பேக்ஸ்ட்ரோக் எஸ்9 - ஆஷிஷ் குமார்
50மீ பட்டர்பிளை - சஜன் பிரகாஷ்
★ கிரிக்கெட் - இரவு 8 மணி - ஆஸ்திரேலியா vs இந்தியா
★ டிரையத்லான் - மாலை 6 மணி
ஆண்கள் - ஆதர்ஷ் எம்.எஸ்., விஸ்வநாத் யாதவ்
பெண்கள் - சஞ்சனா ஜோஷி, பிரக்ஞா மோகன்
★ குத்துச்சண்டை - மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது
ஆண்கள் 63.5 கிலோ எடைப்பிரிவு - ஷிவா தாபா
ஆண்கள் 67 கிலோ எடைப்பிரிவு- ரோஹித் டோகாஸ்
ஆண்கள் 75 கிலோ எடைப்பிரிவு- சுமித் குண்டு
ஆண்கள் 80 கிலோ எடைப்பிரிவு- ஆஷிஷ் குமார்
★ ஸ்குவாஷ் - மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது
ஆண்கள் ஒற்றையர் பிரிவு - சவுரவ் கோசல், ரமித் டாண்டன், அபய் சிங்
பெண்கள் ஒற்றையர் - ஜோஷ்னா சின்னப்பா, சுனய்னா குருவில்லா, அனாஹத் சிங்
★ பேட்மிண்டன் (கலப்பு அணி) : இந்தியா vs பாகிஸ்தான் - இரவு 11 மணிக்கு தொடங்குகிறது