< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த்-2022
காமன்வெல்த்: குத்துச்சண்டை போட்டி : இந்திய வீராங்கனை ஜேஸ்மின் லம்போரியா வெண்கலம் வென்றார்
|7 Aug 2022 7:00 AM IST
இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.
பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கான (60 கிலோ ) அரையிறுதி குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஜேஸ்மின் லம்போரியா இங்கிலாந்தின் ஜெம்மா பைஜ் ரிச்சர்ட்சன் ஆகியோர் மோதினர் .
இப்போட்டியில் ஜேஸ்மின் லம்போரியா 2-3 என்ற கணக்கில் ஜெம்மா பைஜ் ரிச்சர்ட்சனிடம் தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் மூலம் ஜேஸ்மின் லம்போரியா வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.