< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.யில் வெளியாகும் யோகிபாபுவின் சட்னி சாம்பார் வெப் தொடர்
ஓ.டி.டி.

ஓ.டி.டி.யில் வெளியாகும் யோகிபாபுவின் 'சட்னி சாம்பார்' வெப் தொடர்

தினத்தந்தி
|
22 July 2024 3:41 PM IST

நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்த 'சட்னி சாம்பார்' தொடரின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, மண்டேலா, ஜெய்லர் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

மேலும் சமீபத்தில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் படத்தில் நடித்து மலையாளத்திலும் அறிமுகமானார். இந்த நிலையில் யோகி பாபு தற்போது, 'சட்னி சாம்பார்' என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். இந்த தொடரில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

வாணி போஜன், மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். இந்தத் தொடரை இயக்குனர் ராதாமோகன் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், 'சட்னி சாம்பார்' தொடர் குறித்த பதிவு ஒன்றை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இந்த தொடர் வருகிற 26-ந் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ராதா மோகன் இயக்கும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்