< Back
ஓ.டி.டி.
பேமிலி படம் ஓ.டி.டியில் வெளியாவது எப்போது?
ஓ.டி.டி.

'பேமிலி படம்' ஓ.டி.டியில் வெளியாவது எப்போது?

தினத்தந்தி
|
11 Jan 2025 4:52 PM IST

செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் உதய் கார்த்திக் நடித்துள்ள 'பேமிலி படம்' ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.

செல்வகுமார் திருமாறன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 6-ந் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'பேமிலி படம்'. இந்த படத்தில் உதய் கார்த்திக் மற்றும் சுபிக்ஷா ஜோடியாக நடித்துள்ளனர். யுகே கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரித்துள்ள இந்தப் படத்தில் விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார், சந்தோஷ், மோகனசுந்தரம், ஆர்ஜே பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு அனிவீ இசையமைத்துள்ளார். அஜிஷ் பின்னணி இசை அமைத்துள்ளார். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் கதாநாயகன் உதய் கார்த்திக் சினிமா இயக்குனராக வேண்டும் என, தன் குடும்பத்துடன் ஒரு படத்தை தயாரித்து இயக்குகிறார்கள். அவர்களால் உருவாகும் படம் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிய கதை தான் பேமிலி படம்.

இந்நிலையில் உதய் கார்த்திக் நடித்த பேமிலி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வருகிற 14-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்