ஓ.டி.டி.யில் வெளியானது 'உணர்வுகள் தொடர்கதை' திரைப்படம்!
|பாலு சர்மா இயக்கியுள்ள 'உணர்வுகள் தொடர்கதை' திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.
சென்னை,
'உணர்வுகள் தொடர்கதை' திரைப்படம் திரையரங்குகளில் மார்ச் 22 அன்று வெளியானது. இப்படத்தில் ஹிருஷிகேஷ், ஷெர்லின் சேத், ஆர்.ஜே.அஜய் டைட்டஸ், ஸ்ரீரஞ்சனி, வி.ஜே.ஆடம்ஸ், அட்டுல், தரணி, மகாலட்சுமி குணசேகரன், நாகராஜன் கண்ணன், அக்ஷயா கோபால், கிரண் தேவ், காவ்யா உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
பாலு சர்மா படத்தை இயக்கியுள்ளார். இளம் காதல் தம்பதியின் வாழ்வில் நடக்கின்ற சம்பவங்கள், நிர்ப்பந்தங்களை கருவாக வைத்து படம் உருவாகியுள்ளது. அவர்கள் பலவிதமான உணர்ச்சிகளைக் கடந்து செல்லும் போது, அவர்களது உறவின் தருணங்கள் காட்டப்படுகின்றன. அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து செல்லும்போது, அவர்களுக்கு அடுத்து என்ன நடக்கிறது என்பதைச் சுற்றியே படம் சுழல்கிறது.
இந்த படத்தை பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தை நினைவூட்டும். திரைக்கதையும், காட்சிகளும் ரசிகர்களை கவரும் விதத்தில், ஜனரஞ்சகமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. சமீர் பரத் ராம் படத்தை தயாரித்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது ஆஹா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.