< Back
ஓ.டி.டி.
Ullozhukku OTT release: When and where to watch Urvashi and Parvathy Thiruvothu starrer drama flick outside of India

image courtecy:instagram@par_vathy

ஓ.டி.டி.

ஓ.டி.டி.யில் வெளியான நடிகை ஊர்வசி, பார்வதி திருவோது நடித்த 'உள்ளொழுக்கு'

தினத்தந்தி
|
27 July 2024 12:03 PM IST

நடிகை ஊர்வசி மற்றும் பார்வதி திருவோது நடித்துள்ள 'உள்ளொழுக்கு' திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியானது.

சென்னை,

90-களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ஊர்வசி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தற்போது ஊர்வசி சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை ஊர்வசி மற்றும் பார்வதி திருவோது ஆகியோர் இணைந்து 'உள்ளொழுக்கு' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். கிறிஸ்டோ டாமி இயக்கிய இந்த திரைப்படம் கடந்த மாதம் 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இந்த படம் சிம்பிளி சவுத் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அமேசான் பிரைம் தளத்தில் வருகிற ஆகஸ்ட் 2-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது. இருப்பினும், இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் அறிவிக்கப்படவில்லை.

மேலும், இப்படத்தில் நடித்துள்ள நடிகை ஊர்வசி, பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' படத்திலும், நடிகை பார்வதி திருவோது, பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாக உள்ள 'தங்கலான்' படத்திலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்