< Back
ஓ.டி.டி.
திரிஷா நடித்த பிருந்தா வெப் தொடர் டிரெய்லர் வெளியானது
ஓ.டி.டி.

திரிஷா நடித்த 'பிருந்தா' வெப் தொடர் டிரெய்லர் வெளியானது

தினத்தந்தி
|
21 July 2024 5:33 PM IST

திரிஷா நடித்த 'பிருந்தா' வெப் தொடர் டிரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

மவுனம் பேசியதே, சாமி, கில்லி, ஆறு, குருவி, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து திரிஷா 'லியோ' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இந்நிலையில், திரிஷா மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கிய தெலுங்கு மொழி வெப் தொடரில் நடித்துள்ளர். இது இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ், மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இந்த தொடருக்கு 'பிருந்தா' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் திரிஷா போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், மணி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராகேந்து மவுலி உட்பட பலர் இந்த தொடரில் நடித்துள்ளனர். ஆஷிஷ் தயாரித்த இந்தத் தொடருக்கு, சக்தி காந்த் கார்த்திக் இசையமைத்துள்ளார்.

இந்தத் தொடர் ஆகஸ்ட் 2-ந் தேதி சோனி ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் திரிஷா தமிழில் 'விடாமுயற்சி' மற்றும் 'தக் லைப்', தெலுங்கில் 'விஸ்வம்பர', மலையாளத்தில் 'ராம் அண்ட் ஐடென்டிட்டி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'பிருந்தா' வெப் தொடர் டிரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சிட்டியில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த கொலையை கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரி திரிஷா களமிறங்குகிறார். கொலையாளி பிடிபட்டாரா? என்பது தான் இந்த படத்தின் டிரெய்லரில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்