< Back
ஓ.டி.டி.
Top South Indian Movies on OTT
ஓ.டி.டி.

ஓ.டி.டியில் உள்ள டாப் தென்னிந்திய படங்கள்

தினத்தந்தி
|
3 Aug 2024 1:01 PM IST

திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற தென்னிந்திய படங்கள் தற்போது ஓ.டி.டியில் உள்ளன.

சென்னை,

திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற தென்னிந்திய படங்கள் தற்போது எந்த ஓடிடி தளத்தில் உள்ளது என்பதை காணலாம்

1. 'மகாராஜா'

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி வெளியான படம் 'மகாராஜா'. அழுத்தமான கதையம்சம் கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தற்போது இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் காணலாம்.

2. 'சீதா ராமம்'

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான 'சீதா ராமம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. 1964-ம் ஆண்டு கால கட்ட பின்னணியில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் உள்ளது.

3. 'காந்தாரா'

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் 'காந்தாரா'. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் காணலாம்.

4. 'ஆர்.ஆர்.ஆர்'

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், 'ஆர்ஆர்ஆர்'. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. தற்போது இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.

5. 'சலார்'

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் 'சலார்'. இந்த படத்தை கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரீயா ரெட்டி, கருடா ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் காணலாம்.

6. 'பேமிலி ஸ்டார்'

கீதா கோவிந்தம்', 'சர்காரு வாரி பட்டா' படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த திரைப்படம் 'பேமிலி ஸ்டார்'. இந்த படத்தில் 'சீதா ராமம்' புகழ் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்தார். தற்போது இப்படம் பிரைம் வீடியோவில் உள்ளது

மேலும் செய்திகள்