< Back
ஓ.டி.டி.
Top 7 Tamil romantic movies on OTT: Suriya starrer Vaaranam Aayiram to Vijay Sethupathi’s Naanum Rowdy Dhaan
ஓ.டி.டி.

ஓ.டி.டி.யில் உள்ள சிறந்த 7 தமிழ் காதல் திரைப்படங்கள்

தினத்தந்தி
|
24 July 2024 9:32 PM IST

தமிழில் வெளியான பல படங்கள் தற்போது ஓ.டி.டி.யில் உள்ளன.

சென்னை,

தமிழில் வெளியான பல படங்கள் தற்போது ஓ.டி.டி.யில் உள்ளன. அவ்வாறு தமிழில் வெளியான பல நல்ல காதல் படங்கள் ஓ.டி.டி.யில் உள்ளன. அதன்படி, டாப் 7 தமிழ் காதல் படங்களை தற்போது பார்க்கலாம்.

1.வாரணம் ஆயிரம்(Vaaranam Aayiram)

கடந்த 2008ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'வாரணம் ஆயிரம்'. கவுதம் மேனன் இயக்கிய இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களிலும் சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்தனர். தற்போது இப்படத்தை ஜீ 5 தளத்தில் காணலாம்.

2. மயக்கம் என்ன(Mayakkam Enna)

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியான படம் 'மயக்கம் என்ன'.

தனுஷ் நடித்திருந்த இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். தற்போது இப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் உள்ளது.

3.கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (Kandukondain Kandukondain)

அஜித் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான படம் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'. பிரபல மலையாளத் திரைப்பட நடிகரான மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் போன்ற பலரது நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தினை ராஜிவ் மேனன் இயக்கினார். இத்திரைப்படத்தை தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் காணலாம்.

4. அச்சம் என்பது மடமையடா (Achcham Yenbadhu Madamaiyada)

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம் 'அச்சம் என்பது மடமையடா'. சிம்பு மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். தற்போது இப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் உள்ளது.

5. நானும் ரவுடிதான் (Naanum Rowdy Dhaan)

'நானும் ரவுடிதான்' திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் ஆகும். விக்னேஷ் சிவன் எழுதி இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர். தற்போது இப்படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் காணலாம்.

6. 7ஜி ரெயின்போ காலனி (7G Rainbow Colony)

ரவி கிருஷ்ணா நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தை செல்வராகவன் எழுதி இயக்கினார். தற்போது இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது.

7. அலை பாயுதே (Alai Payuthey)

கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம் 'அலைபாயுதே'. மணிரத்னம் இயக்கிய இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இப்படத்தை அமேசான் பிரை வீடியோவில் காணலாம்.

மேலும் செய்திகள்