ஓ.டி.டியில் உள்ள டாப் 7 தமிழ் கேங்ஸ்டர் படங்கள்
|தமிழ் சினிமாவில் டான்கள் மற்றும் ரவுடிகள் பற்றிய படங்கள் எப்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமானவை.
சென்னை,
கேங்க்ஸ்டர் திரைப்படங்கள் எப்போதுமே ஆக்சன் நிறைந்த அனுபவத்திற்கு சரியான தேர்வாக இருக்கும். தமிழ் சினிமாவில் டான்கள் மற்றும் ரவுடிகள் பற்றிய படங்கள் எப்போதும் ரசிகர்களுக்கு பிடித்தமானவை.
அவ்வாறு, ஒவ்வொரு சினிமா ரசிகரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய டாப் 7 தமிழ் கேங்ஸ்டர் திரைப்படங்களைக் தற்போது கணலாம்.
7. கபாலி
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் கபாலி. இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் உள்ளது.
6. பில்லா
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் பில்லா. இத்திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்தார். இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் உள்ளது.
5. மகான்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த கேங்ஸ்டர் ஆக்சன் திரைப்படம் மகான். இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் உள்ளது.
4. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் உள்ளது.
3. விக்ரம் வேதா
ஆர் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்த படம் விக்ரம் வேதா. திரைப்படம் புஷ்கர்-காயத்ரி இயக்கிய இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்களில் உள்ளது.
2. வடசென்னை
கடந்த 2018-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் வடசென்னை. இப்படம் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்களில் உள்ளது.
1. ஆரண்ய காண்டம்
தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான படம் ஆரண்ய காண்டம். இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் உள்ளது.