இன்று ஓடிடியில் வெளியான படங்கள்
|இன்று பல படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன.
சென்னை,
திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பு ஓடிடியில் வெளியாகின்றன. அதன்படி, இன்றும் பல படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன. அதன்படி,
'மகாராஜா'
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
'பகலறியான்'
8 தோட்டாக்கள் பட நடிகர் வெற்றி நடிப்பில் வெளியான 'பகலறியான்' திரைப்படம் இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
'ககுடா'
சோனாக்சி சின்ஹா தற்போது 'ககுடா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சாகிப் சலீம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஆதித்யா சர்போத்தர் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
'பில்'
ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ் 'பில்'. இதில், பவன் மல்ஹோத்ரா, நேஹா சரப், அக்சத் சவுகான், அன்ஷுல் சவுகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ் குமார் குப்தா இயக்கியுள்ள 'பில்' சீரிஸ் இன்று ஜியோ சினிமாவில் வெளியானது.
'சோ டைம்' சீசன்1 பார்ட் 2
இம்ரான் ஹாஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சோ டைம்' சீசன்1 பார்ட் 2 இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. அர்ச்சித் குமார் மற்றும் மிஹிர் தேசாய் இயக்கிய இதில், நசிருதீன் ஷா, மஹிமா மக்வானா, மௌனி ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'பரியா'
அங்கனா ராய், பிக்ரம் சாட்டர்ஜி, ஸ்ரீலேகா மித்ரா, சௌமியா முகர்ஜி, அம்பரீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'பரியா'. ததாகதா முகர்ஜி இயக்கியுள்ள இப்படம் இன்று ஹோய்ச்சோயில் வெளியானது.