இன்று ஓ.டி.டியில் வெளியான படங்கள்
|இன்று சில தொடர் மற்றும் படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன.
சென்னை,
திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவும் ஓடிடியில் வெளியாகின்றன. அதன்படி, இன்று சில தொடர் மற்றும் படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், இன்று எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
1. கிங்டம் ஆப் தி பிளானெட் ஆப் தி ஆப்ஸ்
வெஸ் பால் இயக்கத்தில் கடந்த மே மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'கிங்டம் ஆப் தி பிளானெட் ஆப் தி ஆப்ஸ்'. இப்படத்தில், பிரேயா ஆலன், கெவின் டுரண்ட், சாரா விஸ்மன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜான் இசையில் திரையரங்குகளில் வெளியான இப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
2.'பிருந்தா'
சூர்யா மனோஜ் வாங்கலா இயக்கத்தில், நடிகை திரிஷா நடித்த 'பிருந்தா' வெப் தொடர் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
3. 'எ குட் கேர்ள்ஸ் கைடு டு மர்டர்'
'வெட்னஸ்டே' நடிகை எம்மா மியர்ஸ் நடித்துள்ள தொடர் 'எ குட் கேர்ள்ஸ் கைடு டு மர்டர்'. இந்த சீரிசின் முதல் சீசனில் மொத்தம் 6 எபிசோடுகள் உள்ளன.
இதில் எம்மா மியர்ஸ்-பிப்பா பிட்ஸ் அமோபியாக நடித்துள்ளார். மேலும், ஜைன் இக்பால், லில்லி டேவிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் நேற்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
4.'மார்டர்ன் மாஸ்டர்ஸ்'
சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த 'மார்டர்ன் மாஸ்டர்ஸ்' என்ற ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
5.'ரயில்'
இயக்குனர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ரயில்' திரைப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.