< Back
ஓ.டி.டி.
Today OTT release
ஓ.டி.டி.

இன்று ஓடிடியில் வெளியான படங்கள்

தினத்தந்தி
|
26 July 2024 1:26 PM IST

இன்று பல படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன

சென்னை,

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவும் ஓடிடியில் வெளியாகின்றன. அதன்படி, இன்று பல படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன. அதன்படி,

'பிளடி இஷ்க்'

ஹாரர் படமாக உருவாகியுள்ள 'பிளடி இஷ்க்' படத்தில் அவிகா கோர் நடித்துள்ளார். விக்ரம் பட் இயக்கும் இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாகியுள்ளது.

'எலைட் சீசன் 8'

கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், நம்பமுடியாத அதன் கதைக்களம் மற்றும் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் மூலம் மக்களை மீண்டும் மீண்டும் வசீகரித்து வருகிறது. அதன்படி, 'எலைட் சீசன் 8' நெட்பிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

'டிராகன் பிரின்ஸ் சீசன் 6'

அனிமேஷன் தொடரான 'தி டிராகன் பிரின்ஸ்' சீசன் 6 நெட்பிளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

'பையா ஜி'

அபூர் சிங் கார்கி இயக்கத்தில் கடந்த மே மாதம் 24-ம் தேதி வெளியான படம் பையா ஜி. மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள இப்படம் இன்று ஜீ5ல் வெளியாகியுள்ளது.

'சட்னி சாம்பார்'

யோகி பாபு தற்போது, 'சட்னி சாம்பார்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், வாணி போஜன், மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'சட்னி சாம்பார்' தொடர் இன்று முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

மேலும் செய்திகள்