இந்த வாரம் ஓ.டி.டியில் வெளியான படங்கள் - 13.10.24 முதல் 19.10.24 வரை
|இந்த வாரம் ஓ.டி.டியில் பல படங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை,
திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், கடந்த 13-ம் தேதி முதல் இன்று வரை எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகின என்பதைக் காணலாம்.
'ஸ்னேக்ஸ் & லேடர்ஸ்'
ஏ ஸ்டோன் பெஞ்ச் புரொடக்சன் சார்பில் கல்யாண் சுப்ரமணியன் தயாரித்துள்ள தொடர் 'ஸ்னேக்ஸ் & லேடர்ஸ்'. அசோக் வீரப்பன், பரத் முரளீதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோர் இணைந்து இந்த தொடரை இயக்கியுள்ளனர். இதில் நவீன் சாந்ரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் நேற்று பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
'லெவல் கிராஸ்'
தற்போது பிரபல இயக்குநர் ஜித்து ஜோசப் வழங்கும் 'லெவல் கிராஸ்' படத்தில் நடித்துள்ளார். ஜித்து ஜோசப்பிடம் உதவி இயக்குநராக இருந்த அர்பாஜ் அயூப் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இது உளவியல் திரில்லர் திரைப்படமாகும். இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்தப் படத்தில் தான் நடிகை அமலா பால் பாடகியாக முதல்முறையாக அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கடந்த 13-ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
'ரீட்டா சன்யால்'
தமிழில் ‛சார்லி சாப்ளின் 2' படத்தில் நடித்தவர் அடா சர்மா. தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் இவர் ‛கேரளா ஸ்டோரி' படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தற்போது ‛ரீட்டா சன்யால்' என்ற இந்தி வெப் தொடரில் வக்கீலாக நடித்துள்ளார். அபிருப் கோஷ் இயக்கத்தில் உருவான இந்த தொடரில் மாணிக் பாப்னேஜா, ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரின் முதல் சீசன் கடந்த 14-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது
'ஸ்ட்ரிங்கிங் சீசன் 2'
பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்ட் நடித்துள்ள தொடர் ஸ்ட்ரிங்கிங். தற்போது இதன் 2-வது சீசன் உருவாகியுள்ளது. இது கடந்த 16-ம் தேதி ஆப்பிள் டிவியில் வெளியானது.
`1000 பேபீஸ்
நஜீம் கோயா இயக்கத்தில் ரஹ்மான், நீனா குப்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள வெப் தொடர் `1000 பேபீஸ்'. இது நேற்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி மற்று மராத்தி மொழிகளில் வெளியானது.
'தி பிரதீப்ஸ் ஆப் பிட்ஸ்பர்க்'.
மைக்கேல் ஷோவால்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள தொடர் 'தி பிரதீப்ஸ் ஆப் பிட்ஸ்பர்க்'. சிந்து வீ, நவீன் வில்லியம், அஸ்வின் சக்திவேல், மேஹன் ஹிட்லி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தொடரின் முதல் சீசன் கடந்த 17-ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியானது.
`தி டெவில்ஸ் ஹவர் சீசன் 2
ஜானி ஆலன், இசபெல்லே சீப், ஜேம்ஸ் கிராண்ட் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ளது `தி டெவில்ஸ் ஹவர் சீசன் 2. இதில், ஜெசிகா ரெய்ன், பீட்டர் கபால்டி, நிகேஷ் படேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது நேற்று அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது.