< Back
ஓ.டி.டி.
தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆப் பவர் 2வது சீசன் டிரெய்லர் வெளியீடு
ஓ.டி.டி.

'தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆப் பவர்' 2வது சீசன் டிரெய்லர் வெளியீடு

தினத்தந்தி
|
27 July 2024 5:31 PM IST

பிரமாண்டமான காட்சிகளுக்காகவே புகழ்பெற்ற 'தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆப் பவர்' 2வது சீசன் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

'தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆப் பவர்' என்பது ஒரு அமெரிக்க மாயாஜால தொடராகும். ஜேடி பெய்ன் மற்றும் பேட்ரிக் மெக்கே ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்த தொடரின் முதல் சீசன் முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகளவில் மாபெரும் வெற்றியை பெற்றது. அத்துடன் உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கண்டு ரசித்த தொடராகும்.

பிரமாண்டமான காட்சிகளுக்காகவே புகழ்பெற்ற இந்த தொடர், அதற்கிணங்க இந்த 2-வது சீசனை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்த, கலாட்ரியல், எல்ரோன்ட், பிரின்ஸ் டுரின், அரோண்டிர் உட்பட ரசிகர்களுக்கு பிடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் மீண்டும் தோன்றியுள்ளனர்.

இதில், புகழ்பெற்ற மோதிரங்கள், மாயாஜால உயிரினங்கள், வரவிருக்கும் போர்கள் மற்றும் டார்க் லார்ட் சாரோனின் வளர்ந்து வரும் தீய தாக்கம் ஆகிய காட்சிகள் அடங்கிய 'லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆப் பவர்' தொடரின் 2-வது சீசனின், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர்.

'லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆப் பவர் 2-வது சீசன்' ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் மொழிகளில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாக உள்ளது. மேலும், இதன் 2-வது சீசன், வருகிற ஆகஸ்ட் 29-ந் தேதி அன்று உலகளவில் வெளியாக உள்ளதாக பிரைம் வீடியோ அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்