ஓ.டி.டி.யில் வெளியாகும் சஞ்சய் தத்தின் 'குட்சாடி' படம்
|நடிகர் சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டான் நடித்துள்ள 'குட்சாடி' படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இவர், தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுகளை பெற்றவர். இவர் தற்போது 'ஹவுஸ்புல் 5' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் நடித்த 'குட்சாடி' படத்தினை பின்னாய் கே காந்தி இயக்கியுள்ளார். மேலும், இந்தப்படத்தில் பார்த் சம்தான் மற்றும் குஷாலி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 'குட்சாடி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதன்படி, இது குறித்த பதிவினை நடிகர் சஞ்சய் தத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் வருகிற ஆகஸ்ட் 9-ந் தேதி ஜியோ சினிமா பிரீமியம் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்பட உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப்படம் காதல், குடும்பம் மற்றும் சமூக எதிர்ப்புகள் அடங்கிய படமான அமைந்துள்ளது.