< Back
ஓ.டி.டி.
Rukmini Vasanths Telugu debut film released on OTT
ஓ.டி.டி.

ஓ.டி.டியில் வெளியானது ருக்மணி வசந்த் தெலுங்கில் அறிமுகமான படம்

தினத்தந்தி
|
27 Nov 2024 2:36 PM IST

ருக்மணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதியுடன் 'ஏஸ்' படத்திலும், சிவகார்த்திகேயனின் 23-வது படத்திலும் நடித்து வருகிறார்.

'சப்த சாகர தாச்சே எல்லோ' படத்தின் மூலம் பிரபலமான ருக்மணி வசந்த், சமீபத்தில் வெளியான 'பஹீரா' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தைத்தொடர்ந்து, சிவராஜ்குமாருடன் 'பைரதி ரணகல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் 2017-ம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான 'முப்தி' படத்தின் தொடர்ச்சியாகும். இதில், சிவராஜ்குமார் வழக்கறிஞராகவும், ருக்மணி வசந்த் மருத்துவராகவும் நடித்துள்ளனர். மேலும், தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' படத்திலும், சிவகார்த்திகேயன் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் ருக்மணி வசந்த் நடித்து வருகிறார்.

கன்னடம் மற்றும் தமிழ் படங்களைத்தொடர்ந்து, தெலுங்கிலும் சமீபத்தில் ருக்மணி வசந்த் அறிமுகமானார். அதன்படி, இவர் தெலுங்கில் நடித்த முதல் படம் 'அப்புடோ இப்புடோ எப்புடோ'. நிகில் சித்தார்தா கதாநாயகனாக நடித்த இப்படத்தை சுதீர் வர்மா இயக்கி இருந்தார்.

கடந்த 8ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், இப்படம் இன்று அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்