< Back
ஓ.டி.டி.
Road trip horror movies in OTT
ஓ.டி.டி.

ஓ.டி.டியில் உள்ள சாலைப் பயண திகில் திரைப்படங்கள்

தினத்தந்தி
|
20 Aug 2024 8:43 PM IST

ஓ.டி.டியில் பல‌ சாலைப் பயண திகில் திரைப்படங்கள் உள்ளன.

சென்னை,

திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, தற்போது பல திகில் படங்கள் ஓடிடியில் உள்ளன. தற்போது அதில் உள்ள சாலைப் பயண திகில் திரைப்படங்களை காணலாம்.

பிளட் ரிலேடிவ்ஸ்

இயக்குனர் நோவா செகன் எழுதி இயக்கிய திகில் திரைப்படம் 'பிளட் ரிலேடிவ்ஸ்'. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் விக்டோரியா மொரொல்ஸ், நோவா செகன், ஆகாஷா பங்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை ஏஎம்சி பிளஸ் மற்றும் சட்டர் தளங்களில் காணலாம்.

போன்ஸ் அண்ட் ஆல்

லூகா குவாடாக்னினோ இயக்கத்தில் கடந்த 2022-ஆண்டு வெளியான படம் 'போன்ஸ் அண்ட் ஆல்'. டெய்லர் ரஸல், க்ளோய் செவிக்னி, திமோதி சாலமேட் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் பிரைம் வீடியோவில் உள்ளது.

கம்மிங் கோம் இன் தி டார்க்

ஜேம்ஸ் ஆஷ்கிராப்ட் இயக்கத்தில் டேனியல் கில்லீஸ், எரிக் தாம்சன், மிரியமா மிக்டவெல் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் 'கம்மிங் கோம் இன் தி டார்க்'. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் காணலாம்.

ஹைவே டு ஹெ

அட் டி ஜாங் இயக்கத்தில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் 'ஹைவே டு ஹெல்'. பென் ஸ்டில்லர், ஜெர்ரி ஸ்டில்லர், கில்பெர்ட், கில்பர்ட் காட்பிரைட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் தற்போது பிரைம் வீடியோவில் உள்ளது.

ஜாய் ரைடு

ஜான் டகி இயக்கத்தில் பால் வால்கர், லிலி சொபிஸ்கி, ஜெசிகா பவுமேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஜாய் ரைடு,. கடந்த 2001-ம் ஆண்டு வெளியான இப்படத்தை பாரமவுண்ட் பிளஸ் மற்றும் புளுடோ டிவியில் காணலாம்

மேலும் செய்திகள்