< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.யில் வெளியாகும் ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல்
ஓ.டி.டி.

ஓ.டி.டி.யில் வெளியாகும் ஆர்.ஜே.பாலாஜியின் 'சொர்க்கவாசல்'

தினத்தந்தி
|
16 Dec 2024 10:23 AM IST

மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 'சொர்க்கவாசல்' படம் உருவாகி உள்ளது.

பிரபல இயக்குனரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் கடந்த மாதம் 'சொர்க்கவாசல்' படம் வெளியானது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குனர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள். இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

1999-ல் மத்திய சிறைச்சாலையில் நடந்த கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளார். இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், சொர்க்கவாசல் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 27-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்