ஓ.டி.டி.க்கு தயாரான தனுஷின் 'ராயன்'?
|தனுஷ் நடித்த 'ராயன்' படத்தின் ஓ.டி.டி. குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்' திரைப்படம் கடந்த 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் திருப்பங்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் தனுஷுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷனும், தங்கையாக துஷாரா விஜயனும் நடித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா இதில் வில்லனாக நடித்திருக்கிறார். 'ஏ' சான்றிதழுடன் திரைக்கு வந்த இந்த படம், முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்நிலையில், 'ராயன்' படத்தின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் சன் என்எக்ஸ்டி தளத்தில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.