< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டியில் வெளியாகும்  பாராசூட் வெப் தொடர்
ஓ.டி.டி.

ஓ.டி.டியில் வெளியாகும் 'பாராசூட்' வெப் தொடர்

தினத்தந்தி
|
15 Nov 2024 3:26 PM IST

‘பாராசூட்’ வெப் தொடர் வரும் 29ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது.

சென்னை,

கிஷோர் நடித்துள்ள 'பாராசூட்' வெப்தொடரின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள புதிய வெப்சீரிஸ் 'பாராசூட்'. இதில் நடிகர் கிஷோர் குழந்தைகளின் தந்தையாகவும், பிரபல நடிகை 'குக் வித் கோமாளி' புகழ் கனி குழந்தைகளுக்கு அம்மாவாகவும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணா குலசேகரன், இந்த சீரிஸில் நடிப்பதைத் தவிர, இந்த சீரிஸின் தயாரிப்பையும் கையாளுகிறார். காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் கதையை ஸ்ரீவருண் எழுதியுள்ளார்.தொடருக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


இந்தத் தொடர் வரும் 29ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இரண்டு குழந்தைகள் இரு சக்கர வாகனத்தை வீட்டுக்கு தெரியாமல் எடுத்து ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். ஒரு நாள் அவர்கள் காணாமல் போக அவரது தாய் பதறுகிறார். அடுத்து என்ன என்பதுடன் முடிகிறது.

மேலும் செய்திகள்