< Back
ஓ.டி.டி.
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
ஓ.டி.டி.

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்

தினத்தந்தி
|
23 July 2024 6:55 PM IST

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகியுள்ளன என்பதைக் காணலாம்.

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகியுள்ளன என்பதைக் காணலாம்.

தமிழ் திரைப்படங்கள்:

1. இயக்குனர் ஷிஜின்லால் இயக்கத்தில் சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கும் திரில்லர் திரைப்படம் 'கிராண்மா'. இப்படம் இன்று ஆஹா தமிழ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.

2. பிக்பாஸ் யுகேந்திரன் நடிப்பில் உருவானது 'காழ்' திரைப்படம் வெளிநாடு வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதை காட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் இன்று ஆஹா தமிழ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.

3. குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்துள்ள படம் 'வெப்பன்'. இப்படம் வருகிற 26-ந் தேதி ஆஹா தமிழ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

பாலிவுட் திரைப்படம்:

விக்ரம் பட் இயக்கத்தில் அவிகா கோர் நடித்த ஹாரர் படம் 'பிளடி இஷ்க்'. இப்படம் வருகிற 26-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

ஹாலிவுட் திரைப்படம்:

அமெரிக்க அனிமேஷன் தற்காப்புக் கலை நகைச்சுவைத் திரைப்படமான 'குங்பூ பாண்டா 4' இன்று ஜியோ பிரீமியம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்