< Back
ஓ.டி.டி.
கோலி சோடா ரைசிங் வெப் சீரிஸின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்
ஓ.டி.டி.

'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸின் ஓ.டி.டி ரிலீஸ் அப்டேட்

தினத்தந்தி
|
4 Sept 2024 4:57 PM IST

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரீஸாக வெளியாக உள்ளது.

சென்னை,

விஜய் மில்டன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான படம் கோலி சோடா. இயக்குனர் பாண்டிராஜ் வசனம் எழுதியிருந்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருந்தனர். அருணகிரி இப்படத்திற்குப் பாடல்கள் அமைத்திருக்க அனூப் என்பவர் பின்னணி இசையை கவனித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் உருவானது.

இதில் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர்கள் இல்லாமல் புது நடிகர்கள் நடித்திருந்தனர். விஜய் மில்டனே இந்தப் படத்தையும் இயக்கியிருந்த நிலையில் கவுதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரப்நோட் நிறுவனம் தயாரிப்பில் அச்சு ராஜா மணி இசையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்றது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்த பாகம் வெப் சீரிஸாக தயாராகி உள்ளது. இந்த வெப் சீரிஸுக்கு 'கோலி சோடா ரைசிங்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சேரன், ஷியாம், ரம்யா நம்பீசன், அபிராமி, அம்மு அபிராமி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட ஏழு மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்து.

தற்போது, இந்த வெப் சீரிஸின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸ் வருகிற 13-ந் தேதியில் இருந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்