< Back
ஓ.டி.டி.
OTT release date of superhit thriller KA announced
ஓ.டி.டி.

சூப்பர்ஹிட் திரில்லர் 'கா' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
24 Nov 2024 4:33 PM IST

கிரண் அப்பாவரம் கதாநாயகனாக நடித்த 'கா' படம் தீபாவளியன்று வெளியானது.

சுதீப் மற்றும் சுஜித் இயக்கத்தில் தீபாவளியன்று வெளியான படம் 'கா'. இவர்கள் இயக்கிய முதல் படம் இதுவாகும். இதில் கிரண் அப்பாவரம் கதாநாயகனாகவும், தன்வி ராம் மற்றும் நயன் சரிகா என இரண்டு கதாநாயகிகளும் நடித்தனர்.

ஸ்ரீசக்ராஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த இப்படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்தது.

இந்நிலையில், திரில்லர் கதைக்களத்தில் சூப்பர் ஹிட் அடித்த இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது அதன்படி, இப்படத்தின் தெலுங்கு பதிப்பு வரும் 28-ம் தேதி இடிவி வின் தளத்தில் வெளியாக உள்ளது. இதன் மற்ற பதிப்புகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாதநிலையில், விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்