< Back
ஓ.டி.டி.
Netflix announces Squid Game 2’s streaming date
ஓ.டி.டி.

'ஸ்குவிட் கேம் 2' - ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
2 Aug 2024 7:23 AM IST

'ஸ்குவிட் கேம்' தொடரின் 2-வது சீசன் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் 'ஸ்குவிட் கேம்'. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.

இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இதனையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதன்படி, இந்தத் தொடரின் 2-வது சீசன் வரும் டிசம்பர் மாதம் 26-ம் தேதி வெளியாகும் என நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், 3-வது சீசன் அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்