< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.
ஓ.டி.டியில் வெளியாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் ?
|8 Oct 2024 1:24 PM IST
நயன்தாரா கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
சென்னை,
'ஐயா' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணவிழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இவர்களுக்கு தற்போது, உலன், உலக் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது 80 நிமிட நீளம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இவர் நடித்த 'டெஸ்ட்' படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.