ஓடிடியில் வெளியாகும் 'நாகேந்திரன்ஸ் ஹனிமூன்ஸ்' தொடர்
|சுராஜ் வெஞ்சாரமூடு நடித்துள்ள 'நாகேந்திரன்ஸ் ஹனிமூன்ஸ்' தொடர் ஓடிடியில் வெளியாக உள்ளது.
சென்னை,
பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. 100-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் நிதின் ரெஞ்சி பணிக்கர் இயக்கத்தில் 'நாகேந்திரன்ஸ் ஹனிமூன்ஸ்' என்ற தொடரில் நடித்துள்ளார்.
இதில் ரமேஷ் பிஷாரடி, ஸ்வேதா மேனன், கனி குஸ்ருதி, கிரேஸ் ஆண்டனி, அம்மு அபிராமி, கலாபவன் ஷாஜோன், அலெக்சாண்டர் பிரசாந்த் மற்றும், ஜனார்த்தனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.
கடந்த 6-ந் தேதி இந்தத் தொடரின் டிரைலர் வெளியானது. அதில் வெளிநாட்டில் வேலை செய்ய ஆசைப்படும் நாகேந்திரன், பல்வேறு மதங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த ஐந்து பெண்களை திருமணம் செய்துகொள்கிறார். பின்னர் அவரது திட்டங்கள் அனைத்தும் சீர்குலைந்து போவதாக அமைந்துள்ளது இந்த தொடர்.
இந்நிலையில், இந்த தொடர் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, வருகிற 19-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 'நாகேந்திரன்ஸ் ஹனிமூன்ஸ்' வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.