< Back
ஓ.டி.டி.
Munjya movie OTT release date: When and how to watch the Bollywood movie online?

image courtecy:instagram@sharvari

ஓ.டி.டி.

ஓடிடியில் வெளியாகும் சத்யராஜின் 3-வது இந்தி படமான "முஞ்யா"?

தினத்தந்தி
|
29 July 2024 8:55 AM IST

"முஞ்யா" படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

பிரபல பாலிவுட் இயக்குனர் ஆதித்யா சர்போதார். இவர் இயக்கத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தி படம் "முஞ்யா". இதில், ஷர்வரி வாக், அபய் வர்மா, மோனா சிங் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஹாரர் காமெடி படமாக உருவான "முஞ்யா" வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியாகி ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சத்யராஜ் முன்னதாக இந்தியில் சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ராதேஷ்யாம் படங்களில் நடித்திருந்தார். தற்போது நடித்துள்ள "முஞ்யா" இவருக்கு 3-வது இந்தி படமாகும். இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "முஞ்யா" அடுத்த மாதம் அல்லது செப்டம்பர் மாதம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்