< Back
ஓ.டி.டி.
நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
ஓ.டி.டி.

நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்

தினத்தந்தி
|
26 Sept 2024 5:27 PM IST

நாளை (செப்டம்பர் 27) எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

சென்னை,

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்க்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், நாளை எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

1. கொட்டுக்காளி : பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கொட்டுக்காளி'. சிவகார்த்திகேயன் தயாரித்த இத்திரைப்படத்தில் நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிடையாது. இப்படம் சமீபத்தில் 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது நாளை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

2. டிமான்ட்டி காலனி 2 : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் 'டிமான்ட்டி காலனி 2'. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

3. காபி : இனியா, முக்தா கோட்சே, ராகுல் தேவ், ராமச்சந்திரன் துரைராஜ் மற்றும் சவுந்தரராஜன் ஆகியோர் நடித்துள்ள படம் 'காபி'. சாய் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்