இன்று ஓ.டி.டி.யில் வெளியான படங்கள் - 24.10.2024
|இன்று எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பதை காணலாம்.
திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும், நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, இன்று சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளன. அந்த வகையில், இன்று (24.10.2024) எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
1. கோழிப்பண்ணை செல்லதுரை : இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை'. கிராமத்துக் கதைக்களத்தில் அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. "உறவுகளின் மேன்மையை, அன்பைச் சொல்லும் திரைப்படம்" என அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இப்படம் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
2. கடைசி உலகப் போர் : ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான படம் 'கடைசி உலகப் போர்'. போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடராஜ் என்ற நட்டியின் 'கிங் மேக்கர்' கதாப்பாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இப்படம் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
3. போனியார்ட் : இது ஒரு அமெரிக்க சீரியல் கில்லர் திரில்லர் திரைப்படமாகும். இந்த படம் மேற்கு மேசா கொலைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரான ஆசிப் அக்பர் தயாரித்துள்ளார். இப்படம் தீர்க்கப்படாத தொடர் கொலை வழக்கை பற்றி ஆராயும் கதை களத்தில் உருவாகி உள்ளது. இப்படம் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
4. கிரியேஷன் ஆப் தி காட்ஸ் - கிங்டம் ஆப் ஸ்டார்ம்ஸ் : இயக்குனர் வுர்ஷன் இயக்கிய சீன கற்பனை கதை திரைப்படமாகும். இது கிரியேஷன் ஆப் தி காட்ஸ் ட்ரைலாஜி படத்தின் அடுத்த பாகமாக உருவாகி உள்ளது. இது சீனாவில் இதுவரை அதிக வசூல் செய்த 25வது படமாகும். இப்படம் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
5. கேனரி பிளாக் : 'கேனரி பிளாக்' என்பது ஆக்ஷன்- திரில்லர் உளவுத் திரைப்படமாகும். இந்த படத்தை பியர் மோரல் இயக்கியுள்ளார். மேத்யூ கென்னடி இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இப்படத்தில் கேட் பெக்கின்சேல் சிஐஏ ஏஜென்டாக நடிக்கிறார். இப்படம் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.