இன்று ஓ.டி.டியில் வெளியான படங்கள் - 30.08.2024
|இன்று ஓ.டி.டியில் சில படங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை,
திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, இன்று சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், இன்று எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
'மாய நிழல்'
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு மலையாளத்தில் 'நிழல்' என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு 'மாய நிழல்' என்ற பெயரில் வெளியானது. இந்த நிலையில், 'மாய நிழல்' திரைப்படம் இன்று ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'கனா காணும் காலங்கள் சீசன் 3'
கனா காணும் காலங்கள் தற்போது மூன்றாவது சீசனை அறிவித்துள்ளது. இதில், தேஜா வெங்கடேஷ், தீபிகா வெங்கடாசலம், ஆஷிக் கோபிநாத், பரத் குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இன்று கனா காணும் காலங்கள் சீசன் 3, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
'தி டெலிவரன்ஸ்'
லீ டேனியல்ஸ் இயக்கத்தில் ஹாரர்-சஸ்பென்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் 'தி டெலிவரென்ஸ்'. இப்படத்தில் கிளென் குளோஸ், ஆந்த்ரா டே, மோனிக், மிஸ் லாரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'பிரீத்லெஸ்'
மனு ரியோஸ், பிளாங்கா சுரேஸ், போர்ஜா லூனா, நஜ்வா நிம்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ் பிரீத்லெஸ். மார்டா மற்றும் டேவிட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த சீரிஸ் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'முர்ஷித்'
சந்தீப் சட்டர்ஜி, கே கே மேனன், தனுஜ் விர்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் முர்ஷித். இப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
'கேடட்ஸ்'
தனய் சேடா, சயான் சோப்ரா, துஷார் ஷாஹி மற்றும் கவுதம் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உருவாகி இருக்கும் தொடர் 'கேடட்ஸ்'. இந்த தொடர் இன்று ஜியோசினிமாவில் வெளியாகி இருக்கிறது.