இன்று ஓ.டி.டியில் வெளியான படங்கள் - 20.09.24
|இன்று ஓ.டி.டியில் சில படங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை,
திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும், நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, இன்று சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், இன்று எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
பேச்சி
தமிழில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமான காயத்ரி சங்கர், தற்போது பேச்சி என்ற திரில்லர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நண்பர்கள் காட்டுக்குள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து பெரும் ஆபத்துகளை எதிர்கொண்டு அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்ற வகையில் அமைந்துள்ள இப்படம் இன்று ஆஹா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'தலைவெட்டியான் பாளையம்'
இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற வெப் தொடர் 'பஞ்சாயத்'. இந்த தொடர் தற்போது தமிழில் ரீமேக் செய்து 'தலைவெட்டியான் பாளையம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 எபிசோடுகள் அடங்கிய இந்தத் தொடரில் அபிஷேக் குமார், சேத்தன், தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி, பால் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தற்போது இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
காபி
இனியா, முக்தா கோட்சே, ராகுல் தேவ், ராமச்சந்திரன் துரைராஜ் மற்றும் சவுந்தரராஜன் ஆகியோர் நடித்துள்ள படம் காபி. சாய் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ள இப்படம் இன்று ஆஹா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
சாலா
ஶ்ரீநாத், அருள்தாஸ், சம்பத்ராம், 'மெட்ராஸ்' வினோத் என நிறைய பேர் நடித்திருக்கும் படம் 'சாலா'. பிரபுசாலமனின் உதவியாளரான எஸ்.டி. மணிபால், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இன்று இந்த படம் ஆஹா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.