< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.
ஓ.டி.டியில் வெளியாகும் மாரி செல்வராஜின் 'வாழை'
|13 Sept 2024 10:46 AM IST
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'வாழை' படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
சென்னை,
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி வெளியான திரைப்படம் 'வாழை'. இந்த படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'வாழை' படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படம் விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'வாழை' திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படம் வருகிற 27-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் முதலில் தமிழில் வெளியாகும் எனவும் , பின்னர் பிற மொழிகளிலும் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.