ஓ.டி.டியில் மாபெரும் சாதனை படைத்த மகாராஜா
|ஓ.டி.டி.யில் மாபெரும் சாதனை ஒன்றை மகாராஜா படைத்துள்ளது.
சென்னை,
இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான மகாராஜா, திரையரங்குகளில் வெளியாகி சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை கடந்தது. இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதிக்கு மறக்க முடியாத மைல் கல்லாக மகாராஜா மாறியுள்ளது.
இந்த வெற்றியைத்தொடர்ந்து, இந்தப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது. தற்போது, இப்படம் இந்த ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட மூன்றாவது இந்தியத் திரைப்படம் என்ற மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது.
2024ல் நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 10 இந்தியத் திரைப்படங்கள்:
1. க்ரூ: 17.9 மில்லியன்
2. லாபாதா லேடீஸ்: 17.1 மில்லியன்
3. மகாராஜா: 15.5 மில்லியன்
4. ஷைத்தான்: 14.8 மில்லியன்
5. பைட்டர்: 14 மில்லியன்
6. அனிமல்: 13.6 மில்லியன்
7. மகாராஜ்: 11.6 மில்லியன்
8. டன்கி: 10.8 மில்லியன்
9. பக்சக்: 10.4 மில்லியன்
10. படே மியான் சோட் மியான்: 9.6 மில்லியன்