ஓ.டி.டி.யில் லால் சலாம் - வெளியான தகவல்
|கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள 'லால் சலாம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். விக்னேஷ் , லிவிங்ஸ்டன் , செந்தில் , ஜீவிதா , கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 20-ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.