< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.
ஓ.டி.டியில் வெளியான கே.ஜி.எப், காந்தாரா, சலார் பட தயாரிப்பு நிறுவனத்தின் 'பஹீரா'
|22 Nov 2024 11:25 AM IST
இயக்குனர் பிரசாந்த் நீல் கதை எழுதிய 'பஹீரா' படத்தை இயக்குனர் சூரி இயக்கினார்.
கே.ஜி.எப், காந்தாரா, சலார் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம் 'பஹீரா'. இயக்குனர் பிரசாந்த் நீல் கதை எழுதிய இப்படத்தை இயக்குனர் சூரி இயக்கினார்.
இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்திருந்தார். ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவானதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி, மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 31ம் தேதி தீபாவளியன்று இப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் உலகம் முழுவதும் ரூ. 30 கோடி வசூலித்தது.
இதனையடுத்து, இப்படம் நேற்று ஓ.டி.டி.யில் வெளியாகி உள்ளது. அதன்படி, நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உள்ளது.