< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.யில் வெளியானது கவுண்டம்பாளையம்  திரைப்படம்
ஓ.டி.டி.

ஓ.டி.டி.யில் வெளியானது 'கவுண்டம்பாளையம்' திரைப்படம்

தினத்தந்தி
|
12 Oct 2024 9:11 PM IST

ரஞ்சித் நடித்துள்ள ‘கவுண்டம்பாளையம்’ திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

சென்னை,

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய பொன் விலங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் 2003ஆம் ஆண்டு பீஷ்மர் என்ற படத்தை இயக்கினார். இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மறுமலர்ச்சி, சபாஷ், பாண்டவர் பூமி, பசுபதி ராசக்காபாளையம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெரிய கவனம் பெற்றார்.

சில ஆண்டுகளாக சினிமாவைவிட்டு விலகியிருந்தவர், தொலைக்காட்சித் தொடர் மூலம் சின்னத்திரை நடிகராக வலம் வந்தார். தற்போது, கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி நடித்துள்ளார். ஸ்ரீபாசத்தாய் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளளனர்.

கவுண்டம்பாளையம் படத்தின் புரோமோசனுக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில், "நாடகக் காதலை எதிர்ப்பதால் நான் சாதிவெறியன் என்றால், ஆம் நான் சாதிவெறியன்தான்" எனக் கூறி சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

இதனிடையே ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்