< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.
ஓ.டி.டி.யில் வெளியாகும் 'இந்தியன் 2' திரைப்படம்
|4 Aug 2024 4:01 PM IST
'இந்தியன் 2' திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் ஜூலை 12 -ம் தேதி 'இந்தியன் 2' படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்தியன் முதல் பாகம் இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு வருகின்ற நிலையில் 'இந்தியன் 2' பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
'இந்தியன் 2' திரைப்படம் வரும் 9-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.