< Back
ஓ.டி.டி.
Kajol and Kriti Sanon starrer Too Patti to release directly on OTT
ஓ.டி.டி.

நேரடியாக ஓ.டி.டியில் வெளியாகும் கஜோல், கிருத்தி சனோன் நடித்துள்ள 'டூ பட்டி'

தினத்தந்தி
|
30 Sept 2024 1:42 PM IST

'டூ பட்டி' படத்தில் கிருத்தி சனோன் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகைகளான கஜோல், கிருத்தி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டூ பட்டி'. இயக்குனர் ஷஷாங்கா சதுர்வேதி இயக்கியுள்ள இப்படத்திற்கு கனிகா தில்லான் கதை எழுதி இருக்கிறார். இப்படத்தில் கிருத்தி சனோன் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை கஜோல் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதன்படி, 'டூ பட்டி' அடுத்த மாதம் 25-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. கிருத்தி சனோனும், கஜோலும் இணைந்து நடிப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு கடந்த 2015-ம் அண்டு வெளியான தில்வாலே படத்தில் நடித்திருந்தனர்.

மேலும் செய்திகள்