< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.யில் வெளியாகும் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள பணி படம்
ஓ.டி.டி.

ஓ.டி.டி.யில் வெளியாகும் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள 'பணி' படம்

தினத்தந்தி
|
6 Jan 2025 4:31 PM IST

மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள திரில்லர் படமான 'பணி' ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர். தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானவர் சூர்யா - 44 மற்றும் கமலுடன் தக் லைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் 7 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி வெளியான 'பணி' படத்தை இவரே இயக்கி நடித்துள்ளார். இப்படம் இவர் இயக்கிய முதல் படமாகும். நாடோடிகள் அபிநயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஜய், சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்கள். கேரளாவின் திருச்சூரில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்த திரில்லர் படம் உருவாகியுள்ளது. மலையாளத்தில் உருவான 'பணி', இந்தி, தெலுங்கு, கன்னடத்திலும் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் திரையரங்குகளில் நல்ல வசூலை செய்தது.

இந்த நிலையில் இப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. அதாவது, வருகிற 16-ந் தேதி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்