ஓ.டி.டியில் உள்ள டாப் 5 சைக்கோ-திரில்லர் படங்கள்
|தமிழில் வெளியான சிறந்த சைக்கோ-திரில்லர் திரைப்படங்கள் ஓ.டி.டியில் உள்ளன.
சென்னை,
சைக்கோ-திரில்லர் படங்களுக்கென்று உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். தென்னிந்திய சினிமாவில் இன்னும் சொல்லப்போனால், தமிழ் திரையுலம் சிறந்த சைக்கோ திரில்லர் திரைப்படங்களை தயாரிப்பதில் முக்கியமாக உள்ளது.
இதில், கடைசி நிமிடம் வரை உங்களை அதிர்ச்சியின் விளிம்பில் வைத்திருக்கும் டாப் 5 தமிழ் சைக்கோ-திரில்லர் படங்களை காண்போம்.
5. 'இமைக்கா நொடிகள்'
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராசி கன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் 'இமைக்கா நொடிகள்'. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் உள்ளது.
4. 'நிபுணன்'
அர்ஜுன், வரலட்சுமி சரத்குமார், பிரசன்னா, வைபவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் 'நிபுணன்'. அருண் வைத்தியநாதன் இயக்கிய இப்படத்தை தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணலாம்.
3. 'வேட்டையாடு விளையாடு'
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் 'வேட்டையாடு விளையாடு'. கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் தற்போது சன் என்எக்ஸ்டி ஓடிடி தளத்தில் உள்ளது.
2. 'சைக்கோ'
மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி, நித்யா மேனன், அதிதி ராவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த படம் 'சைக்கோ'. கடந்த 2020-ம் ஆண்டு வெளியான இப்படத்தை தற்போது ஜீ5 தளத்தில் காணலாம்.
1. 'ராட்சசன்'
விஷ்ணு விஷால், அமலாபால், அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'ராட்சசன்'. ராம் குமார் இயக்கத்தில் உருவான இப்படம் தற்போது சன் என்எக்ஸ்டி ஓடிடி தளத்தில் உள்ளது.