ஓ.டி.டி.யில் உள்ள டாப் 7 பிரண்ட்ஷிப் படங்கள்
|திரையரங்குகளில் வெளியான டாப் 7 பிரண்ட்ஷிப் படங்கள்.
சென்னை,
திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, திரையரங்குகளில் வெளியான டாப் 7 பிரண்ட்ஷிப் படங்களை தற்போது காணலாம்.
1. 'பெங்களூர் டேய்ஸ்'
அஞ்சலி மேனம் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம் 'பெங்களூர் டேய்ஸ்'. நஸ்ரியா, பகத் பாசில், நிவின் பாலி, நித்யா மேனன் நடிப்பில் வெளியான இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது.
2. 'கிரிக் பார்ட்டி'
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, சம்யுக்தா ஹெக்டே நடித்த படம் 'கிரிக் பார்ட்டி'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் தற்போது ஜியோ சினிமாவில் உள்ளது.
3. 'ஆர்.ஆர்.ஆர்'
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், 'ஆர்ஆர்ஆர்'. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. தற்போது இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.
4. 'ஹேப்பி டேய்ஸ்'
சேகர் கம்முலா இயக்கிய 'ஹேப்பி டேய்ஸ்' படம் கடந்த 2007-ம் ஆண்டு வெளியானது. ராகுல் ஹரிதாஸ், தமன்னா, நிகில் சித்தார்த்தா நடிப்பில் உருவான இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் உள்ளது.
5. 'வுன்னாதி ஓகே ஜிந்தகி'
கிஷோர் திருமுலா இயக்கத்தில் ராம் பொத்தனேனி, அனுபமா நடிப்பில் வெளியான படம் 'வுன்னாதி ஓகே ஜிந்தகி'. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் உள்ளது.
6. 'கிளாஸ்மேட்ஸ்'
பிருத்விராஜ், காவ்யா மாதவன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் 'கிளாஸ்மேட்ஸ்'. லால் ஜோஸ் இயக்கிய இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது.
7.'பிரேமம்'
நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா நடிப்பில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய படம் 'பிரேமம்'. கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது.