< Back
ஓ.டி.டி.
இந்த வாரம் ஓ.டி.டியில் வெளியாகும் படங்கள்
ஓ.டி.டி.

இந்த வாரம் ஓ.டி.டியில் வெளியாகும் படங்கள்

தினத்தந்தி
|
6 Nov 2024 4:57 PM IST

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

டெஸ்பிகபிள் மீ 4

டெஸ்பிகபிள் மீ 4 அமெரிக்க அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமாகும். யுனிவர்சல் பிக்சர்ஸ் அண்ட் இலுமினேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தை கிறிஸ் ரெனாட் இயக்கினார். 6 பாகங்களை கொண்ட இந்த படத்தின் 4-வது பாகம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் நேற்று (05-11-2024) ஜியோ சினிமா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

கோழிப்பண்ணை செல்லதுரை

இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை'. இந்த படம் கிராமத்துக் கதைக்களத்தில் அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று (05-11-2024) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

பிரசன்ன வதனம்

அறிமுக இயக்குனர் அர்ஜுன் ஒய்.கே இயக்கத்தில் நடிகர் சுஹாஸின் நடிப்பில் வெளியான படம் 'பிரசன்ன வதனம்'. இது ஒரு மர்ம திரில்லர் திரைப்படம் ஆகும். திரையரங்குகளில் வெளியான இப்படம் தொடர்ந்து சிறந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் இன்று (06-11-2024) ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

சிட்டாடல் ஹனி பன்னி

சமந்தா மற்றும் வருண் தவான் நடித்துள்ள வெப் தொடர் 'சிட்டாடல் ஹனி பன்னி'. ஆக்சன் திரில்லர் நிறைந்த இந்த தொடரை இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளார். இது ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இந்த நிலையில், இந்த வெப் சீரிஸ் நாளை (07-11-2024) அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

வேட்டையன்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'வேட்டையன்'. இந்த படத்தில் பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப் பச்சனும் நடித்துள்ளனர். திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வருகிற 8-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

தேவரா

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவான படம் 'தேவரா பாகம்-1''. இதில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்சன் கதைக்களத்தில் வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இப்படம் வருகிற 8-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

ஏ.ஆர்.ஏம்

அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடித்துள்ள படம் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' (ஏ.ஆர்.எம்). இந்த படத்தில் டொவினோ தாமஸ் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வருகிற 8-ந் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்